Monday, June 10, 2019

உத்தாமணி மூலிகை

உத்தாமணி முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்ப காரப் பண்புகளும் கொண்டது. குடைச்சல், குத்தல், வீக்கம், நடுக்கம், வலி, இரைப்பு, இருமல், கோழை ஆகியவற்றை நீக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; வாந்தி உண்டாக்கும்; பசியைத் தூண்டும். இலைச்சாறு மூக்கடைப்பை நீக்கும்.

கருப்பைக்கான சத்து மருந்தாகவும் கபத்தையும் வாந்தியையும் வெளியே கொண்டு வரும் மருந்தாகவும் இலைகள் பயன்படும் என்பது ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த தாவரத்தின் பிரதானமான செயல்படும் மூலப்பொருள் “பெர்குலேரியா” மகப்பேற்றின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கினைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

5செ.மீ நீளமுடைய, இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிறமான பூங்கொத்துகளையும், மென்மையான முட்களைக் கொண்ட காய்கறிகளையும் உடைய சுற்றிப் படரும் கொடியினம்.

காய்கள், இரட்டையான தொகுப்புடன் வளைந்து 7 செமீ வரை நீளமாகக் காணப்படும். மேற்பகுதியில் சாம்பல் நிறமான வலிமையற்ற முட்களுடன் கூடியது. காய்களின் உள்ளிருக்கும் முட்டை வடிவமான விதைகளில் பட்டு போன்ற பஞ்சிழைகள் அடுக்கப்பட்டிருக்கும்.

தென்னிந்தியா முழுவதும் இயல்பாக வளர்கின்றது. தமிழகமெங்கும் ஏறுகொடிகளாக வேலிகளில் படர்கின்றது. தாவரத்தைக் கிள்ளினால் பால் வடியும். வேலிப்பருத்தி, உத்தம கன்னிகை போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், செரியாமை தீர பசுமையான 3 உத்தாமணி இலைகளைச் சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, இலேசாக நசுக்கி 100மிலி தண்ணீரில் இட்டு காய்ச்சி 25 மிலி அளவாக குடிநீராக செய்து கொள்ள வேண்டும். சிறிதளவு வசம்பைச் சுட்டு கரியாகிக் கொண்டு, 2 அரிசி எடை அளவு கரியை 25 மிலி உத்தாமணிக் குடிநீருடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனை குழந்தைகளுக்கு 5 மிலி அளவு காலை, மாலை இரண்டு வேளைகள் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்கள் வெளியாக உத்தாமணி இலையின் குடிநீரை, 20 மி.லி. அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.

வீக்கம் குறைய உத்தாமணி இலைச் சாற்றைச் சிறிதளவு சுண்ணாம்புடன் கலந்து கால் வீக்கங்களுக்குப் பற்றாக போடலாம்.

மூட்டுவலி கட்டுப்பட உத்தாமணி இலைச்சாற்றுடன் சம அளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து மேல்பூச்சாக வலி உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

சூதகவாயு, கீல்வாதம், வீக்கம், ஆஸ்துமா, தலைவலி போன்றவற்றிற்கென தயார் செய்யப்படும் மருந்துகளில் உத்தாமணியும் முக்கிய இடம் வகிக்கின்றது.

சித்த மருந்துகளின் பரிசோதனைகள்

சித்த மருந்துகளின் பரிசோதனைகள்:-


நாட்டு மருந்து கடையில் சென்று சில பற்ப மருந்துகள் வாங்குவோம் அவை சரியாக முடியாமல் இருந்து அதை நாம் பயன்படுத்தினால் சில தொந்தரவு ஆளாக வேண்டும். இங்கு நாம் சில பரிசோதனை பற்றி பார்போம்.

1.பற்ப செந்தூரங்களின் பொதுவனான சோதனை:
விரலின் ரேகை பற்ப செந்தூரங்களில் பதிய வேண்டும்.

2.சுண்ணங்களின் பொதுவனான சோதனை:
 சுண்ண வகைகளை மஞ்சள் விட்டு நீர் விட்டு கலக்கும்போது,சிவப்பு வர வேண்டும்

3.வங்க பற்ப சோதனை:
வங்க பற்பம் – 1 பங்கு படிகாரம் – 1/8 பங்கு, நவாச்சாரம் - 1/8 பங்கு இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.

4. நாக பற்ப சோதனை:
நாக பற்பம் 2 பங்கு படிகாரம் – 1/8 பங்கு, நவாச்சாரம் - 1/8 பங்கு இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.

5.வெள்ளி பற்ப சோதனை:
வெள்ளி பற்பம் 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,செம்புத்தூள் - 1/4பங்கு, இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத வெட்டையாகும்.இவ்வெட்டையை, கரி நெருப்பிலிட்டு முன் போலவும் ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.

6.தங்க பற்ப சோதனை:
·         தங்க பற்பம் 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,செம்புத்தூள் - 1/4பங்கு, இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத வெட்டையாகும்.இவ்வெட்டையை, கரி நெருப்பிலிட்டு முன் போலவும் ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.

 உலோகத்திற்குள்ள எந்த மினுமினுப்பும் இருக்க்கூடாது

7. தாம்பிர பற்ப சோதனை;
தாம்பிர பற்ப - 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.

தாம்பிர பற்ப முடிந்த்தாயின்,கனிந்த வாழை பழத்தில் சிறிது பற்பத்தை வைத்து,1 இரவு கழித்து எடுக்க வாழைபழம் கல் போல் இறுகியே காணும்.

8.அயச்செந்தூர சோதனை:
 அயச்செந்தூரம் முடிந்த்தாயின், நீரிலிட்டால் மிதக்கும்.அது காந்த்திற்கு ஒட்டக் கூடாது.

9.அப்பிரக சோதனை
அதில் தளுக்கு இருக்க கூடாது.
விரிசல் விழுந்த மட்கலயத்தில் நீர் விட்டு அதினுள்,அப்பிரக பற்ப இட நீர் கசிவு இருக்க்கூடாது.

10.மிருதார் சிங்கி பற்ப சோதனை:
இரும்பு கரண்டியிலிட்டு சிறிது,வெங்காரம், நல்லெண்ணெய் விட்டு எரிக்கவும்.ஈயம் வர கூடாது