Thursday, May 20, 2021

கற்பூரவள்ளி ( ஓம செடி )

கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் .

கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.

கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.

பயன்கள:

கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.

இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.

கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த:

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.

அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

Sunday, February 14, 2021

நாத கரு தைலம்



                அண்டத்தில் இருந்து கிடைக்கும் அமுரியை சூரிய உதயத்திற்கு முன்    எடுத்து அடிமுடியை நீக்கி சமைத்து ஆறு திங்கள் சமாதி வைக்கவும்.

                 ஏழாம் நாள் எடுத்து அமுரி எட்டுப் பங்கும், கல்லுப்பு இரண்டு பங்கும் சேர்த்து கரைத்து இந்நீரை மேல் சமாதி நீரின் அளவிற்கு எட்டுப் பங்கு கலந்து மூடி சீலை மண் செய்து வெய்யிலிலும், பனியிலும் இருக்குமாறு பார்த்து (மழை நீர் மற்றும் வேறு எந்த வித நீரும் உள்ளே கலந்து விடக் கூடாது)நாலாம் நாள் வாலையில் விட்டு வடிக்க முதலில் வரும் வெள்ளை நீரை தனியாகவும், பின் வரும் இரத்த வர்ண நீரை தனியாகவும் பிடிக்கவும்.இந்த இரத்த வர்ண நீரே நாதத்தின் கருத் தைலம் எனப்படும்.

விளக்கம்:

                       அண்டத்தில் இருந்து கிடைக்கும் அமுரியை என்பது அண்டம் என்றாலும் அமுரி என்றாலும் இரண்டும் ஒன்றே.அமுரி என்பது பொதுப் பெயர்.பிரணவப் பொருளாகிய முதல் பொருளுக்கும் அதிலிருந்து கிடைக்கும் நீர்மங்களுக்கும் அமுரி என்றே பெயர்.இந்த இடத்தில் அமுரி என்பது முதல் பொருளைக் குறிக்கும்.

            அந்த முதல் பொருளை காலையில் அடிமுடி நீக்கி என்பது பரிபாஷை. அமுரி என்பது முழுதும் அமுத மயமானது.அதில் இருக்கும் மூன்றாவது பகுதிப் பொருளை நீக்கி சமைத்து என்பதும் சமாதி வைத்து என்பதும் காடி வைப்பதையே குறிக்கும்.

                ஆறு திங்கள் என்பது ஆறு மாதம் ஆகும்.ஆனால் உண்மையில் இந்த காலக் கணக்கு முற்றிலும் பரிபாஷை ஆகும்.சரியான காலஅளவு என்பது ஆறு வருடங்களாகும். அதன் பின் ஏழாம் நாள் எடுத்து  என்பது பரிபாஷை.அதன் பிறகு எடுத்து அமுரி எட்டுப் பங்கும், கல்லுப்பு இரண்டு பங்கும் சேர்த்து கரைத்து, இந்த நீரை மேல் சமாதி நீரின் அளவிற்கு எட்டு பங்கு கலந்து என்பது.....அமுரியை காடி வைக்கும்  போது பல வகை மாற்றங்கள் ஏற்படும்.அப்போது தான் அமுரியும், அண்டக்கல்லும் (கல்லுப்பு) கிடைக்கும்.இதில் வெள்ளை நிற அமுரி, வெள்ளை அண்டக்கல், சிவப்பு நிற அமுரி, சிவப்பு அண்டக்கல் போன்றவை கிடைக்கும்.

                   அமுரி எட்டு பங்கும், கல்லுப்பு இரண்டு பங்கும் சேர்த்து கரைத்து வெய்யிலிலும், பனியிலும் இருக்குமாறு பார்த்து என்பது காடி வைப்பதே ஆகும்.அவ்வாறு காடி வைக்கும் போது வாலை வடிதல் நடைபெறும்.முதலில் கூறியதையே , இரண்டாவதாக வேறு விதமான பரிபாசையில் கூறுகிறார்.இரண்டு செய்முறையும் ஒன்றே. 

            மேற்படி செய்முறையில் கிடைத்த இரத்த வர்ண நீரே நாதத்தின் கருத் தைலம் எனப்படும்.

வசம்பு பயன்

விசம் முறிவு    : வசம்பு + மஞ்சள்

அலர்ஜி              : வசம்பு + வெந்தயம

நரம்புதளரச்சி : வசம்பு + கருப்பட்டி

வயிற்று வலி   : வசம்பு + தேன்

தோல் நோய்    : வசம்பு + மஞ்சள்

திக்கு வாய்       : வசம்பு + தேன்

வயிற்று கோளாறு : வசம்பு+ சீரகம்

சிறுநீரக கோளாறு : வசம்பு + புதினா + சின்னவெங்காயம்

வயிற்றிள்ள பூச்சிகளை வெளியேற்ற : வசம்பு + பூண்டு + வெள்ளம்

மூட்டுவலி : வசம்பு + மிளகு + சுக்கு

சீதபேதி : வசம்பு + நொங்கு

அஜீரணம் : பசியின்மை

நியாபக சக்தி : வசம்பு + வல்லாரை + தேன்

வேர்குரு : வசம்பு + பெருங்காயம் + பால்

வாயு தொல்லை : வசம்பு + சீரகம் + மோர்

மாதவிடாய் : வசம்பு + செவ்வாலை பழம்