அண்டத்தில் இருந்து கிடைக்கும் அமுரியை சூரிய உதயத்திற்கு முன் எடுத்து அடிமுடியை நீக்கி சமைத்து ஆறு திங்கள் சமாதி வைக்கவும்.
ஏழாம் நாள் எடுத்து அமுரி எட்டுப் பங்கும், கல்லுப்பு இரண்டு பங்கும் சேர்த்து கரைத்து இந்நீரை மேல் சமாதி நீரின் அளவிற்கு எட்டுப் பங்கு கலந்து மூடி சீலை மண் செய்து வெய்யிலிலும், பனியிலும் இருக்குமாறு பார்த்து (மழை நீர் மற்றும் வேறு எந்த வித நீரும் உள்ளே கலந்து விடக் கூடாது)நாலாம் நாள் வாலையில் விட்டு வடிக்க முதலில் வரும் வெள்ளை நீரை தனியாகவும், பின் வரும் இரத்த வர்ண நீரை தனியாகவும் பிடிக்கவும்.இந்த இரத்த வர்ண நீரே நாதத்தின் கருத் தைலம் எனப்படும்.
விளக்கம்:
அண்டத்தில் இருந்து கிடைக்கும் அமுரியை என்பது அண்டம் என்றாலும் அமுரி என்றாலும் இரண்டும் ஒன்றே.அமுரி என்பது பொதுப் பெயர்.பிரணவப் பொருளாகிய முதல் பொருளுக்கும் அதிலிருந்து கிடைக்கும் நீர்மங்களுக்கும் அமுரி என்றே பெயர்.இந்த இடத்தில் அமுரி என்பது முதல் பொருளைக் குறிக்கும்.
அந்த முதல் பொருளை காலையில் அடிமுடி நீக்கி என்பது பரிபாஷை. அமுரி என்பது முழுதும் அமுத மயமானது.அதில் இருக்கும் மூன்றாவது பகுதிப் பொருளை நீக்கி சமைத்து என்பதும் சமாதி வைத்து என்பதும் காடி வைப்பதையே குறிக்கும்.
ஆறு திங்கள் என்பது ஆறு மாதம் ஆகும்.ஆனால் உண்மையில் இந்த காலக் கணக்கு முற்றிலும் பரிபாஷை ஆகும்.சரியான காலஅளவு என்பது ஆறு வருடங்களாகும். அதன் பின் ஏழாம் நாள் எடுத்து என்பது பரிபாஷை.அதன் பிறகு எடுத்து அமுரி எட்டுப் பங்கும், கல்லுப்பு இரண்டு பங்கும் சேர்த்து கரைத்து, இந்த நீரை மேல் சமாதி நீரின் அளவிற்கு எட்டு பங்கு கலந்து என்பது.....அமுரியை காடி வைக்கும் போது பல வகை மாற்றங்கள் ஏற்படும்.அப்போது தான் அமுரியும், அண்டக்கல்லும் (கல்லுப்பு) கிடைக்கும்.இதில் வெள்ளை நிற அமுரி, வெள்ளை அண்டக்கல், சிவப்பு நிற அமுரி, சிவப்பு அண்டக்கல் போன்றவை கிடைக்கும்.
அமுரி எட்டு பங்கும், கல்லுப்பு இரண்டு பங்கும் சேர்த்து கரைத்து வெய்யிலிலும், பனியிலும் இருக்குமாறு பார்த்து என்பது காடி வைப்பதே ஆகும்.அவ்வாறு காடி வைக்கும் போது வாலை வடிதல் நடைபெறும்.முதலில் கூறியதையே , இரண்டாவதாக வேறு விதமான பரிபாசையில் கூறுகிறார்.இரண்டு செய்முறையும் ஒன்றே.
மேற்படி செய்முறையில் கிடைத்த இரத்த வர்ண நீரே நாதத்தின் கருத் தைலம் எனப்படும்.